ஒரு கல்லை பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று அழைப்பதா? உடனே அகற்ற நீதிபதி உத்தரவு..!

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (07:10 IST)
ஒரு கல்லை சாலையில் நட்டு அதை சிலை என்று அழைப்பதா? அந்த அளவுக்கு மூடநம்பிக்கை அதிகரித்து விட்டதா? உடனே அதை அகற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கல்லை நட்டு அதை சிலை என்று அழைத்து ஒரு சிலர் வருகிறார்கள் என்றும் அந்த சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு கல்லை சாலையில் நட்டு அதை பச்சை துணியால் மூடி சிலை என்று சொல்லும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுவது வேதனை அளிக்கிறது.

இது போன்ற மூட நம்பிக்கைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலை வருவது துரதிர்ஷ்டமானது, காலத்திற்கு ஏற்ப மக்கள் இன்னும் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

எனவே ஒரு வாரத்தில் அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்