கோவை மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் அவரது உள்ளாடைகளை துவைத்து தரும்படி கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் சத்தியமங்கலம் சார்ப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் செல்வம். இவர் தனது அலுவலகத்தில் ஊழியராக பணிபுரியும் வசந்தி என்பவரிடம் அவருடைய உள்ளாடைகளை துவைத்து தரும்படி கூறியுள்ளார்.
அதற்கு வசந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து வசந்திக்கு மெமோ ஒன்றை நீதிபதி அனுப்பியுள்ளார். அதில் உள்ளாடைகளை துவைக்க மறுத்ததற்கும், நீதிபதியின் மனைவியை எதிர்த்து பேசியதற்கும், உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து வசந்தி பயந்துபோய் இனிமேல் புகார்கள் வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சமாதான கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
நீதிபதி செல்வம் மற்றும் வசந்தி ஆகிய இருவரின் கடிதங்களின் நகல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில செயலாளர் பாலமுருகன் என்பவர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரை எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணையம் இதுகுறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.