ரஞ்சித்துடன் பொங்கலை கொண்டாடிய ஜிக்னேஷ் மேவானி

திங்கள், 15 ஜனவரி 2018 (15:04 IST)
சென்னை வந்துள்ள குஜராத் மாநில எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்தார்.

 
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கி வெற்றிப்பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. தேர்தல் களத்தில் பாஜகவை பயத்தில் ஆழ்த்தியவர் ஜிக்னேஷ். குஜராத்தில் லடசக்கணக்கில் தலித்து மக்கள் அணி திரட்டி நாட்டை திரும்பி பார்க்க வைத்தவர்.
 
சென்னை வருகை தந்த ஜிக்னேஷ் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்து பேசினார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திதத்து மகிழ்ச்சி. அவருடன் பொங்கலை கொண்டாடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்