தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து

ஞாயிறு, 14 ஜனவரி 2018 (20:17 IST)
தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
தமிழர்கள் பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து மற்றும் உலக முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். இங்கிலாந்து வளர்ச்சிக்கு தமிழர்கள் மிகவும் பங்காற்றியுள்ளனர். தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்