காணாமல் போகும் ஜெயலலிதாவின் படம்: எல்லாம் உயிரோடு இருக்கும் போது தான்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (13:26 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தால் தமிழகமே சோகத்தில் இருந்தது. அதிமுக தொண்டர்கள் துயரில் ஆழ்ந்தனர்.


 
 
அவரது மரணத்தை அடுத்து அதிமுகவின் தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஜெயலலிதா வகித்த அந்த பதவியை சசிகலா தான் ஏற்க வேண்டும் என சில நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் தொண்டர்கள் மனநிலை என்பது வேறு.
 
ஜெயலலிதா இருக்கும் போது அம்மா, அம்மா என அவரை சுற்றி சுற்றி வந்த கட்சியினர் தற்போது சின்னம்மா சின்னம்மா சசிகலாவை சுற்றி வருகின்றனர். சசிகலாவுக்கு தற்போது தூபம் போட்டு தலைமையை ஏற்க வேண்டும் என சிலர் கூறி வருவது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
 
அதிமுக தொண்டர்களே இதனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதும் நடக்கின்றன. ஜெயலலிதா இருக்கும் போது அவரது படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்து படம் தெரிவது போல் வலம் வருவார்கள் கட்சியினர். ஆனால் தற்போது போயஸ் கார்டன் வருபவர்கள் ஜெயலலிதாவின் படத்தை எடுத்துவிட்டும், மறைத்துவிட்டும் வருகின்ற கொடுமைகள் நடக்கின்றன.
அடுத்த கட்டுரையில்