தமிழக முதல்வர் ஜெயலலிதா சில வருடங்களுக்கு முன்பு, ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
Rendezvous with Simi Garewal என்ற நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய நடிப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
முக்கியமாக, அவரின் தோழியான சசிகலா குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, இவ்வளவு விமர்சனங்கள் எழுந்தும், நீங்கள் ஏன் சசிகலாவுடன் நட்பு பாராட்டி வருகிறீர்கள்?.. அவரை விட்டுக் கொடுக்காமல் இருப்பது ஏன்?.. என்று கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில் இதுதான்:
என் மீது உள்ள விசுவாசத்தின் காரணமாக, மற்றவர்களால் மிகத் தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். என்னால் அவர் நிறைய துயரங்களை சந்தித்துள்ளார். ஒரு வருடம் சிறையிலும் இருந்துள்ளார். என்னுடைய தோழியாக அவர் இருப்பதால்தான் அவர் அதை சந்திக்க நேர்ந்தது.
அரசியல் வாழ்க்கையில் பரபரப்பாக இருக்கும் ஒருவரால், தன்னுடை குடும்ப நிர்வாகத்தை சரியாக கவனிக்க முடியாது. ஆண்களுக்கு, அவரது வீட்டில் மனைவி அதை பார்த்துக் கொள்வார். என் வீட்டு நிர்வாகத்தை சசிகலா கவனித்துக் கொள்கிறார். இது பல ஆண்களுக்கு இது புரியவில்லை. அதனால், எங்கள் நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.
எனக்கான பொருட்களை யாராவது வாங்கித் தரவேண்டும். என் குடும்பத்தை யாராவது நிர்வகிக்க வேண்டும். சசிகலா அதைத்தான் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் தாயின் இடத்தை நிரப்பியவர் அவர்” என்று அந்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா..