பீஸ்ட் படத்தால் சட்டம், ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கடிதம்

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (15:09 IST)
பீஸ்ட் திரைப்படத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஜவாஹிருல்லா கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இஸ்லாமியர் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது.
 
மேலும் குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பீஸ்ட் படம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஜவாஹிருல்லா எழுதிய கடிதத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்துவதா? என்றும், தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீஸ்ட் திரைப்படத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்