தமிழகத்தில் வருமானவரித்துறையினர் மீண்டும் அதிரடி சோதனை

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (15:09 IST)
முன்னாள் தழிமக தலைமை செயலாளர் ராம மோகன் ராவுக்கு தொடர்புடைய அனைத்து முக்கிய பிரமுகர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனையை தொடங்கவுள்ளனர்.


 

 
கருப்பு பணம் குறித்த தகவல்களில் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிரபல அரசு ஒப்பந்தக தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
அதைத்தொடர்ந்து முன்னாள் தழிமக தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் மற்றும் அவரது மகன் விவேவ் வீட்டிலிருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இதையடுத்து ராம மோகன் ராவுடன் இணைந்து முறைகேடாக பணம் மற்றும் தங்கம் சேர்த்த முக்கிய பிரமுகர்கள் அனைவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
 
இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஐதராபாத்தில் இருந்து சுமார் 60 பேர் கொண்ட குழுவாக வருமானவரித்துறை அதிகாரிகள்  சென்னை வந்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்