ப.குமார் எம்பி தொடர்ந்த வழக்கில் நடிகர் செந்தில் மற்றும் தினகரன் ஆகியோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
காமெடி நடிகர் செந்தில் தற்போது டிடிவி தினகரன் ஆதரவு அணியில் உள்ளார். இவர் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த திருச்சி எம்பி குமாரை பேட்டி ஒன்றில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் செந்தில் சென்னையில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டு வாசலில் ஊடகங்கள் மத்தியில் பேசும்போது திருச்சி எம்பி குமார் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்பி குமார், செந்தில் பேசிய அந்த வீடியோ விவரங்களை சேகரித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனை டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக அந்த புகாரில் எம்பி குமார் கூறியுள்ளார். இதனையடுத்து டிடிவி தினகரன் மீதும் செந்தில் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து தினகரன் ஆதரவு அணியில் உள்ள செந்தில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி வரை தினகரன் மற்றும் செந்திலை கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.