வருமானவரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு! – வருமானவரித்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (13:44 IST)
வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதியை மேலும் நீட்டித்துள்ளது வருமானவரித்துறை.

நடப்பு ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வருமானவரித்துறை செப்டம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட வருமானவரித்துறை இணையதளத்தில் வரிக்கணக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக பலர் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார்கள் சரி செய்யப்பட்டு வரும் நிலையில் கணக்கு தாக்கல் செய்வதில் ஏற்படும் இடர்பாட்டினால் வரி கணக்கு தாக்கல் செய்ய இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்