எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் லியோ சங்கத் துவக்க விழா

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (22:54 IST)
07.10.2022 அன்று எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் லியோ சங்கத் துவக்க விழா நடைபெற்றது. இதில் முதலாம் ஆண்டு மாணவி சகாய செல்வராணி லியோ சங்கத் தலைவராகவும், ரசியாசூல்தானா செயலாளராகவும், அய்னுல்மர்லியா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டனர். 

விழாவின் சிறப்பு விருந்தினராக லயன் எம்.இமயவரம்பன் முதல் துணைநிலை ஆளுநர் கலந்துகொண்டு லியோ சங்க புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி சிறப்புரை வழங்கினார். உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவில் எம் குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரங்கன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் பயிற்சி ஆசிரியர்கள் அனைவரும் கற்பித்தல் பணியோடு, சேவை மனப்பான்மையுடன் திகழ வேண்டும் என வாழ்த்தினார். விழாவின் கரூர் சக்தி லைன்ஸ் சங்கத்தின் தலைவர் சசிக்கலாசுந்தர்ராஜன், செயலாளர் திலகவதிமோகன்ராஜ், பொருளாளர் ராணிசெல்வராஜ், சாசனத்தலைவர்                  ஜெயா பொன்னுவேல், மாவட்ட தலைவர் கவிதா கார்த்தீசன், லியோ சங்கங்களின் மாவட்ட தலைவர் லயன் ரவிச்சந்திரன் மற்றும் கரூர் சக்தி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பாரத சாரணர் இயக்க மாநில தலைமையக பயிற்சியாளர்கள் சண்முக நாச்சியார், அய்யன் துரை, பூரணசந்திரன், கஸ்தூரி பாய், பிரபாவதி ஆகியோர் சிறந்த சாரணர் சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர்.
 
விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், உடல் நலம் பேணிக் காப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.  கல்லூரியின் முதல்வர் முனைவர் சாந்தி மற்றும் பேராசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்