கவர்னர் மீது கருப்பு கொடி வீச்சு: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (17:25 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் ஆய்வுக்கு சென்றிருந்த தமிழக அளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது திமுகவினர் கருப்புக்கொடி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுகவினர், மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இன்று காஞ்சிபுரம் சென்ற ஆளுநர் பன்வாரிலால் படப்பையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தை திறந்து வைக்க சென்றிருந்தார். அப்போது திமுக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கருப்பு கொடி காட்ட காத்திருந்தனர்.
 
இந்நிலையில் பன்வாரிலால் புரோஹித் அங்கு சென்ற போது. அவர் கார் மீது சிலர் கருப்புக்கொடி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்பு போலீசார் கருப்புக்கொடிகளை அகற்றி அளுநரை பதுகாப்பாக அமைத்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்