வளர்ச்சி வேண்டுமென்றால் சிறிய பாதிப்புகள் வரதான் செய்யும்! - பரந்தூர் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Prasanth Karthick
திங்கள், 20 ஜனவரி 2025 (15:27 IST)

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அவர்களை சந்திக்க சென்ற தவெக தலைவர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் பரந்தூர் மக்களுக்கு துணையாக நிற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “சென்னைக்கு மற்றொரு விமான நிலையம் 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுப்போருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உள்ளோம். பொருளாதார வளர்ச்சி பெர வேண்டுமென்றால் சூழலியல் பாதிப்புகளை சிறிதளவில் சந்திக்க வேண்டி இருக்கதான் செய்யும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்