இந்த மாநிலத்திற்கே நான் தான் தலைவி: லண்டன் மருத்துவரிடம் கம்பீரமாக கூறிய ஜெயலலிதா!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (12:02 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தையடுத்து அப்பல்லோவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


 
 
ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் கவனிக்க வந்த 16 நர்ஸ்களில் 3 பேர் அவருக்கு பிடித்த நர்ஸ்கள் என கூறப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்களுடன் பாசமாக பேசிய அவர் எல்லோரையும் தனது இல்லத்துக்கு டீ சாப்பிட அழைத்துள்ளார்.
 
ஒரு முறை லண்டான் மருத்துவர் ரிச்சார்ட் ஜாண் பீலே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது விளையாட்டுக்கு நான் தான் இப்போதைக்கு உங்கள் பாஸ் என கூறியுள்ளார். இதற்கு கம்பீரமாக பதில் அளித்த ஜெயலலிதா நான் தான் இந்த மாநிலத்திற்கே தலைவி என கூறியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்