கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் லாரி-தனியார் பேருந்தும்-கார் ஒன்றோடு ஒன்று மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் விரைந்துள்ளார்.