மக்களவைத் தேர்தல் நிலவரம் தொடர்பாக சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்துள்ளது.
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியும், தேமுதிகவின் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தும் 40 தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் நான்காம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் அதிமுக மாவட்ட செயலாளருடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் நிலவரம், வெற்றி வாய்ப்பு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.