வட்டி கட்டாத தாய்: சிறுமி மீது சூடு பால் ஊற்றி பைனான்ஸ் ஆட்கள் அடாவடி!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (10:51 IST)
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் சிறுமி மீது சூடு பாலை ஊற்றிய சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பணம் கொடுத்து தவணை முறையில் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் டீக்கடைக்காக 35,000 ரூபாய் கடன் வாங்கி இருந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக தவணையை கட்டாமல் இருந்துள்ளனர். 
 
இதனால் ஆத்திரமடைந்த பைனான்ஸ் ஆட்கள் பெற்றோர் மீது இருந்த கோபத்தை அவர்கள் மகள் மீது காட்டியுள்ளனர். டீக்கடையில் இருந்த சுடுநீர் மற்றும் கொதிக்கும் பாலை ஊற்றி துன்புறுத்தி உள்ளனர். காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாதர் சங்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்