புதியதாக வாங்கிய தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்கள் மட்டுமே இருப்பதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டு குறித்து திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் கூறியதாவது:
தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.
கனிமொழியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள போக்குவரத்து துறை கூறியிருப்பதாவது:
வெளி மாநிலத்தில் தயாரித்து கொண்டு வரப்பட்ட அரசு பேருந்தில் இந்தி ஸ்டிக்கர்கள் இருந்தன. பயணிகள் சேவைக்கு விடுவதற்கு முன்பே அரசு பேருந்துகளில் இருந்து இந்தி ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஓடும் எந்த பேருந்துகளிலும் இந்தி எழுத்துக்கள் இல்லை
மேலும் சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்பட்ட ஒரே ஒரு அரசு விரைவு பேருந்தில் மட்டுமே இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. அதிலும் இந்தி எழுத்துக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது