திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதி மன்றம் திட்டவட்டம்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (12:33 IST)
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடத்த வெளியிடப்பட்ட அறிவிப்பானைக்கு  தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பினை அறிவித்துள்ளது.

கலைஞரின் தொகுதியான திருவாரூர் அவரது மறைவுக்குப் பிறகு காலியாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் 5 மாதமாக சட்டமன்ற உறுப்பினர் இன்றி உள்ளது. இந்த தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்ட தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ரத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.

அதில் ஒரு வழக்கில் கஜா புயல் பாதிப்பு நிவாரனப் பனிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை என்றும் கஜா புயலால் பாதிக்கப்ப்ட்ட மக்களில் பலர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை இழந்துள்ளதால் தேர்தலை இப்போது நடத்தாமல் தள்ளி வைக்கவேண்டுமெனக் கூறப்பட்டது. அந்த மனுக்களை ஏற்று உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.

விசாரனை முடிவில் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள் அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க முடியாது எனவும், இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக அரசை ஆலோசித்த பின்பே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறியது. மேலும் வழக்குத் தொடர்பான அடுத்தக் கட்ட விசாரனை பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவித்தார். தேர்தல் தேதி ஜனவரி 28 என்பதால் அடுத்தக் கட்ட விசாரணைக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்