இனி முதல்வர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திடுவார்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (20:15 IST)
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.


 
 
முதல்வர் இல்லாததால் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வசமிருந்த அனைத்து துறைகளும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.  
 
இதன் தொடர்ச்சியாக முதல்வர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் நாட்களில் முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்