கேள்வி கேக்குறது ஈஸி; களத்துல நின்னு பாருங்க வலி தெரியும்! – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (12:41 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து சொல்வதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தை அரசு குறைத்து சொல்வதாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் ” கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது. தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம் கேள்வி கேட்பது சுலபம். களத்தில் இருந்து போராடும்போது தான் அதன் வலி தெரியும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்