இன்று மாலை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (14:57 IST)
இன்று மாலை  7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி  நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாகவும் இதனால் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும்  காலையில் வானிலை அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான வானிலை அறிவிப்பில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்

Edited by Siva
அடுத்த கட்டுரையில்