தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது ஒருவழியாக முடிந்தது. இதனைத்தொடர்ந்து தேர்தல் நெருங்குவதால் அதிமுக, பாஜக மோதல்கள் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், போதிய கால அவகாசம் அளித்தும், மாணவர்களை இதுவரை நீட் தேர்வுக்குத் தயார் ஆகாமல் இருப்பது யாருடைய தவறு? இதற்கு மத்திய அரசு எப்படி பொறுப்பேற்க இயலும்? என நீட் எதிர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து, வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜகவின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த அளவுக்கு பாஜக வலிமையாக உள்ளது என ஹெச். ராஜா தெரிவித்தார்.