அர்பன் நக்சல்களால் நடத்தப்படுகின்ற வன்முறை இயக்கம்: டெல்லி டிராக்டர் ஊர்வலம் குறித்து எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (17:05 IST)
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து கடந்த 2 மாதங்களாக போராட்டம் செய்து வரும் விவசாய சங்கங்கள் மீது பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை செய்து வந்தனர் 
 
குறிப்பாக எச் ராஜா அவர்கள் போராட்டம் செய்பவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை என்றும் அவர்ஜ நக்சல்கள் என்றும் பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் இன்று குடியரசு தின அணிவகுப்பு விழா நடக்கும் நேரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் டிராக்டர் ஊர்வலம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மேலும்ஒரு சில இடங்களில் காவல் துறையினருக்கும் விவசாய சங்கத்தினர்களுக்கும் வன்முறை நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோக்களும் வைரலாகி வரும் நிலையில் நக்சல்களால் நடத்தப்படும் வன்முறை இயக்கம் என்று நான் சொன்னது உறுதியாகியுள்ளது என எச் ராஜா கூறியுள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அர்பன் நக்சல்களால் நடத்தப்படுகின்ற வன்முறை இயக்கம் என்று நாம் சொன்ன போது சிலர் சந்தேகப்பட்டனர் ஆனால் இன்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தீய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பது நமக்கு புரிகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்