தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க இருப்பது சசிகலாவையா? பன்னீர்செல்வத்தையா? என்ற பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் தான் ஆளுநரின் முதல் சாய்ஸாக இருப்பார் என முன்னாள் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் மோகன் பராசரன் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் மோகன் பராசரன் கூறியபோது, தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வராக தொடர அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் பன்னீர்செல்வம் காபந்து முதல்வராக நீடிக்கிறார்.
ஆனால் பன்னீர்செல்வம் ராஜினாமாவை கவர்னர் ஏற்று கொண்டபின் அதன் அடிப்படையில் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் அவர் இப்போது முதல்வராக உள்ளார். தனக்கு வாய்ப்பு கிடைத்தால் பலத்தை நிருபிக்க முடியும் என்கிறார் என்பதால் அவருக்கே முதல் வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளது.
சசிகலாவை பொருத்தமட்டில் சட்டமன்ற உறுப்பினர்களை ஊர்வலமாக கூட்டி சென்றாலும் அதை கவர்னர் பொருட்படுத்த தேவையில்லை. சட்டமன்றத்தில் மனசாட்சிப் படி வாக்களித்து அதன் அடிப்படையிலேயே முடிவுகளை கவர்னர் எடுப்பார்.
இது போன்ற சூழ்நிலையில் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல வழிகாட்டுதல்கள் உள்ளது. இது மட்டுமல்ல இன்னும் சில நாள்களில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பும் வந்துவிடும் என்பதால் ஆளுநரின் முதல் வாய்ப்பு ஒபிஎஸ்க்கே இருக்கும் என தெரிவித்துள்ளார்.