இத்தனை வளங்கள் இருந்தும் தமிழ்நாடு ஏன் வளரவில்லை? கவர்னர் ஆர்.என். ரவி கேள்வி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:03 IST)
இத்தனை வளங்கள் இருந்தும் தமிழ்நாடு ஏன் வளரவில்லை என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் அனைவரும் செய்வதறியாது தவித்தனர் என்றும் ஒவ்வொரு இந்தியனை பற்றியும் பிரதமர் மோடி கவலை கொண்டார் என்றும் கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
வறுமையை ஒழிப்போம் என்று பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள் கூறிக்கொண்டு வருகின்றனர் என்றும் ஆனால் இன்று வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
 
 இத்தனை வளங்கள் இருந்தும் மகாராஷ்டிரா ஹரியானா போல் ஏன் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க வில்லை என்பது என் கேள்வியாக இருக்கிறது என்று தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்