கொரொனாதாக்கத்தால்நான்காம்கட்டஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளதால்மக்கள்ஏற்கனவேவீட்டுக்குள்முடங்கியுள்ளனர். ஒருசில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு கொரோனா தொற்றுக்கு Arsenicam Album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியுள்ளதாவது :
Arsenicam Album 30 என்ற ஹோமியோபதி மருந்தை 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Arsenicam Album 30 என்ற மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.