கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர், செலிவியர் குடும்பத்தினருக்கு அரசுவேலை - நடவடிக்கை தீவிரம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:06 IST)
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர், செவிலியர், உள்ளிட்ட 53 பேர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க வேண்டியவர்களின் அனைத்துவிவரங்களை சேகரித்து அனுப்ப மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பு என்பதால் துரித நடவடிக்கை எடுக்க கோரி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்