ஒரு வழியாக கரையைக் கடந்த கஜா

வெள்ளி, 16 நவம்பர் 2018 (10:14 IST)
கஜா புயல் இன்று காலை 9.30 மணி அளவில் முழுவதிலுமாக கரையை கடந்துள்ளது.
இன்று அதிகாலை நாகை அருகே கஜா புயலில் கண் பகுதி, மையப்பகுதி கரையை கடந்ததால் அந்த பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீவிர புயலாக மையம் கொண்டிருந்த கஜா, காலை 8.30க்கு புயலாக வலுவிழந்த நிலையில் 9.30 மணிக்கு புயலானது முழுவதுமாக கரையைக் கடந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்