கஜா புயலால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

வெள்ளி, 16 நவம்பர் 2018 (07:52 IST)
இன்று அதிகாலை நாகை அருகே கஜா புயலில் கண் பகுதி, மையப்பகுதி கரையை கடந்ததால் அந்த பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருந்ததாலும், அதிகாலையில் புயல் கரையை கடந்ததாலும் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இதுவரை கிடைத்த தகவலின்படி இந்த புயலால் இருவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடலூர் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில், மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி  ஆனந்தன் என்பவர் உயிரிழந்தர. அவருக்கு வயது 40. அதேபோல் விருத்தாச்சலம் அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு வயது 45. அய்யம்மாளின் கணவர்  கணவர் ராமச்சந்திரன் படுகாயம் அடைந்துள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புயல் முழுவதுமாக கரையை கடந்த பின்னரே உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த முழுமையான தகவல் தெரியவரும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்