மிக்ஜாம் புயல் நிவாரணம்: இன்று முதல் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000..!

Mahendran

வெள்ளி, 1 மார்ச் 2024 (14:47 IST)
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய மிக்ஜாம் புயல் நிவாரணமாக, குடும்ப அட்டை இல்லாதவர்கள் தனியாக விண்ணப்பித்த நிலையில், அவர்களின் வங்கிக்கணக்குகளில் ரூ.6000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியானோருக்கு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு 6000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஏற்கனவே 6000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 6000 வழங்குவது குறித்த நடவடிக்கை கடந்த இரண்டு மாதங்களாக எடுக்கப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பம் மூலம் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கும் இன்று முதல் நிவாரணத்தொகை ரூபாய் 6,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்