அம்மா உணவகங்களில் ஞாயிறு வரை இலவச உணவு: மாநகராட்சி ஆணையர் பேட்டி

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (07:44 IST)
அம்மா உணவகங்களில் நாளை வரை அதாவது ஞாயிற்றுக்கிழமை வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 2000 பேர் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அம்மா உணவகங்களில் அனைத்து பொது மக்களுக்கும் ஞாயிறு வரை இலவச உணவு இரவு 10 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டியளித்துள்ளார் 
 
சென்னையில் இன்னும் நிலைமையை சீர் ஆகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உணவு இன்றி யாரும் தவிக்க கூடாது என்ற காரணத்திற்காக அம்மா உணவகங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவுகள் வழங்க இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்