பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 9,890 கன அடியாக உயர்ந்து உள்ளதாகவும், 35 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் 34.68 அடி எட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை நீர் அதிகரிப்பு காரணமாக படிப்படியாக ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அளவு உயர்ந்ததாக நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.