போதை பொருள்களுடன் சினிமா நடிகர் கைது!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:39 IST)
கேரள மாநிலத்தில், மலையாள நடிகர் உள்பட 2 பேரை போதைப்பொருட்களுடன் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சிலர் போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு சென்று சென்று சோதனை  செய்தனர்.

அப்போது, அப்பகுதியில் வரும் வாகங்களையும் போலீஸார் தீவிர சோதனை செய்தனர். இதில், அப்பகுதி வழியாகக் காரில் வந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து 5 கிராம் அளவிலான போதைப் பொருள்( எம்டிஎம்ஏ) இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து,  அருண் மற்றும் குமாரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதில், அருண் என்பவர் மலையாள சினிமாவில் சில படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்