காசு என்ன மரத்துலயா காய்க்குது? ஆன்லைன் கேம் மோகம்! – சிறுவனுக்கு நூதன தண்டனை!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (12:18 IST)
ராமநாதபுரம் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த சிறுவனுக்கு பெற்றோர் அளித்துள்ள தண்டனை கவனத்தை ஈர்த்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த நபர் ஒருவர் தனது வங்கி கணக்கில் 90 ஆயிரம் பணம் வைத்துள்ளார். அவரது 12 வயது மகன் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். எந்நேரமும் படிக்காமல் கேம் விளையாடுவதை பெற்றோரும் கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் கேம் விளையாடிய போது கூடுதலாக ஆயுதங்கள் வாங்க பணம் செலுத்த வேண்டும் என செய்தி வந்துள்ளது. இதனால் சிறுவன் தனது தந்தையின் வங்கி கணக்கை பதிவிட்டு பணம் செலுத்தியுள்ளார். இதனால் சிறுவனின் தந்தை வங்கி கணக்கிலிருந்து 90 ஆயிரம் பணமும் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை தன் மகனுக்கு விநோதமான தண்டனையை வழங்கியுள்ளார். சிறுவனை 1,2,3 என 90,000 வரை எழுத சொல்லி தண்டனை கொடுத்திருக்கிறார் அந்த தந்தை. இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்