கன்னியாகுமரியில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (48). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். ஜார்ஜின் 2வது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த, தனது இளைய மகளுக்கு ஜார்ஜ் பாலியல் தொல்லை கொடுத்தார். தந்தையின் தவறான நடத்தைக் குறித்து சிறுமி பக்கத்து வீட்டார்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். உடனே குழித்துறை அனைத்து மகளிர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, தன்னிடம் தனது தந்தை தவறாக நடந்துகொண்ட சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
சிறுமியின் புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்துகொண்ட காவல் துறையினர் ஜார்ஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.