நான் நலமுடன் இருக்கிறேன் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்று தெரிகிறது.