உதயநிதியின் நீட் ரத்து ரகசியத்தை இப்போது பயன்படுத்தலாமே? ஈபிஎஸ் கேள்வி

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:33 IST)
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்று கூறிய உதயநிதியிடம் அந்த ரகசியம் என்னவென்று கேட்டு அதை திமுக பயன்படுத்தலாமே என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார் 
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்ற ரகசியத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என்றும் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றும் கூறினார்
 
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே? ஏன் செய்யவில்லை? என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் நான் கொண்டு வந்த திட்டம் தான் சிறந்த திட்டம் என்பதால் தான் அதை பின் தொடர்கின்றனர் என்றும் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தற்போது தயாராக உள்ளனர் என்றும் அதை வேட்பாளர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக பணத்திற்கு ஆசைப்பட்டு பொங்கல் நேரத்தில் மக்களின் வயிற்றில் அடித்தனர் என்றும் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்