இந்நிலையில், நீட் ரத்து குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து என உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஏன் இதைச் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.