தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் மற்றும் பரிசு கொடுப்பதாக தற்போது புகார்கள் குவிய தொடங்கிவிட்டன. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணீயில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் சதாப்பேட்டையில் சைதாப்பேட்டையில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தி ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில் தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் நேற்றிரவு பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் ரொக்கமாக ரூ.3 கோடி ரொக்கபணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், திமுக பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.3 கோடியை பறிமுதல் செய்தோம் என்றனர்.