விருதுநகர் மாவட்டம் சிவகாசி புறவழிச் சாலையில் உள்ள ஒரு பட்டாசு கிடங்கில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏராளமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த பெட்டிகளை ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு தீயணைப்பு வாகனம் மூலம், சுமார் 20 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.