தினகரன் போட்ட உத்தரவு: விபூதியை தூக்கி எறிந்த எடப்பாடி பழனிச்சாமி

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (12:12 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அடையாளம் அவரது நெற்றியில் வைத்திருக்கும் விபூதியும் குங்குமமும் தான். எந்த நேரத்திலும் அவரது முகத்தில் விபூதி இல்லாமல் இருக்கமாட்டார். ஆனால் சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் விபூதி இன்றி கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி சமீபகாலங்களில் அவர் விபூதி பூசுவதையும் நிறுத்தியுள்ளார்.


இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசியபோது, எடப்பாடி பழனிச்சாமியின் நெற்றியில் விபூதி வைக்காததற்கு காரணமே டி.டி.வி.தினகரந்தான் என்கின்றனர்.

எடப்பாடியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம். அங்குதான் அவரது குலதெய்வம் கோயில் உள்ளது. அந்த கோயிலிருந்துதான் விபூதி இவருக்கு வழங்கப்படுகிறது. எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும் அந்த விபூதியை பூசியபின்புதான் செய்வாராம்.

இந்த நிலையில் அவரது விபூதி பற்றிய கதையை  தினகரனிடம் அதிமுகவினர் போட்டுக்கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டும் என்று சிறப்பு பூஜை செய்து வந்த விபூதியைதான் அவர் தினமும் நெற்றியில் பூசுகிறார் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்ட தினகரன் கோபம் அடைந்ததாகவும், உடனடியாக முதல்வரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சமீப காலங்களில் எடப்படி பழனிச்சாமி விபூதி பூசுவதில்லை என்று கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்