ஓபிஎஸ் பக்கத்துல உக்காரணுமா? சட்டசபை வராத எடப்பாடியார்! – பேரவையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (10:15 IST)
ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உள்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் புறக்கணித்துள்ளனர்.

அதிமுக தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் சட்டசபையில் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்துள்ளார். அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு முடிவுகளை சட்டசபை அங்கீகரிக்காதது குறித்து அவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited By: Prasanth.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்