செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!

திங்கள், 19 ஜூன் 2023 (11:15 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அவரது தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டது. 
 
இதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் 
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்