போக்குவரத்து & இ-பாஸ் முறையில் மாற்றங்கள்: என்னென்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (10:47 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து மற்றும் இ-பாஸ் முறைகளில் சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
 
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து இன்று காலை தமிழக முதல்வர் மருத்துவர் குழுவினர்களிடம் ஆலோசனை நடத்தினார். 
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும். 
 
தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போக்குவரத்து மற்றும் இ-பாஸ் முறைகளில் சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு... 
 
தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
 
அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். 
 
வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
 
முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்