மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து: சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை..!

Siva
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (07:52 IST)
வடசென்னையின் மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில், உயர் அழுத்த மின் கோபுரத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நேற்றிரவு சென்னையின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் மின் விநியோகம் மீண்டும் சீரானது.

மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்து நடந்த பகுதியை அகற்றி மீண்டும் மின் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்தது.

இதன் காரணமாக சென்னை ஆர்.ஏ.புரம், மயிலாப்பூர், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களுக்கு முதலில் மின் விநியோகம் சீரடையும் எனவும். மற்ற இடங்களுக்கு படிப்படியாக சீராகும் என மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தகவல்  தெரிவித்து இருந்தார். அவர் கூறியபடியே  15 முதல் 30 நிமிடத்தில் மின் விநியோகம் சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் நள்ளிரவில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் உருக்கமாக இருந்ததாகவும் குழந்தைகள் பெரியவர்கள் மிகுந்த கஷ்டப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். ஆனால் அதே நேரத்தில் உடனடியாக மின் விநியோகத்தை சீர் செய்த மின்சார துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்