தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
செவ்வாய், 21 ஜனவரி 2025 (16:31 IST)
தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வட தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜனவரி 23ஆம் தேதி தென் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் 24 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகம் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் நாளை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்