சமீபத்தில் தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்தது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதியம் உயர்த்தி வழங்கியதற்காகவும் பல்வேறு சங்கங்கள் இணைந்து திருச்சியில் நன்றி அறிவிப்பு மாநாட்டை நடந்த நிலையில், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட_மாடல் அரசு பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சியில் என்றும் துணை நிற்கும்! என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
243 அரசாணை வெளியிட்டதற்காகவும், ஆய்வக உதவியாளர் பணி விதிமுறைகள் வெளியிட்டதற்காகவும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதியம் உயர்த்தி வழங்கியதற்காகவும் பல்வேறு சங்கங்கள் இணைந்து திருச்சியில் நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்தினார்கள். இம்மாநாட்டைத் தொடங்கிவைத்த மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்கள் ஆசிரியர்களுக்கும்-கழகத்திற்கும் உள்ள நட்புறவை எடுத்துரைத்து உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் பங்கேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.ல.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக்கொண்டோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சியில் என்றும் துணை நிற்கும்! என்று தெரிவித்துள்ளார்.