தவறுதலாக பதிவு செய்த ட்விட்டிற்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்பி

சனி, 15 பிப்ரவரி 2020 (20:30 IST)
தவறுதலாக பதிவு செய்த ட்விட்டிற்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்பி
திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்த ஒருவர் காயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் விழுந்து கிடப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்து இதற்கு காரணமான அதிமுக மற்றும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் பாஜக அமல்படுத்திய சட்டத்திற்கு அதிமுக மற்றும் பாமக ஆதரவு அளித்ததன் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார் 
 
இந்த நிலையில் டாக்டர் செந்தில்குமார் அவர்கள் பதிவு செய்த புகைப்படம் சிஏஎ சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் காயம் பட்டவர் இல்லை என்றும், ஒரு விபத்தில் காயம்பட்டவரை என்றும் தவறுதலாக செந்தில்குமாரின் பதிவில் இருப்பதாகவும் பலர் சுட்டிக்காட்டினார் 
 
இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தான் உறுதி செய்யாமல் பதிவு செய்துள்ளதாக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் இனிமேல் இப்படிப்பட்ட தவறான பதிவுகள் வராமல் தான் கவனமுடன் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
தவறு என்று தெரிந்தும் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட டாக்டர் செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்