டபுள் மடங்கு விலையேறிய காய்கறி விலை..! கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!

Prasanth Karthick
திங்கள், 13 மே 2024 (12:16 IST)
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்குகின்றன. தற்போது கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் வெயில் காரணமாக பல பகுதிகளில் விவசாயம் சரிவர நடைபெறாததால் காய்கறி வரத்து குறைந்துள்ளதுடன், விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் ரூ.120க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ பீன்ஸ் தற்போது கிலோ ரூ.230 வரை விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.50க்கு விற்ற கேரட் ரூ.70-ம், கிலோ ரூ.70க்கு விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.160க்கும் விற்பனையாகிறது. இதுதவிர அவரைக்காய், சேனைக்கிழங்கு, பச்சை மிளகாய், பூண்டு விலையும் உயர்ந்துள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் வரும் வாரங்களில் வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்